வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்லும் பணி தீவிரம்.. துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு..

Published : Apr 05, 2021, 10:31 AM IST
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்லும் பணி தீவிரம்.. துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு..

சுருக்கம்

சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234  தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 

சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234  தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட வாக்கு பதிவு என் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னையில் இருக்கக்கூடிய 5911 வாக்குப்பதிவு மையங்கள் இருக்கிறது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் எடுத்துச் செல்ல மொத்தமாக 7098 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் தற்பொழுது சைதாப்பேட்டை தொகுதிக்கான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ கலைக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது. 

குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான ஈவிஎம் இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று உடையவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் இயந்திரங்கள் உடனே  எடுத்து செல்லும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக இயந்திரங்களை எடுத்துச் செல்லும்போது காவலர்கள் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் உடன் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!