அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.!! டுவிட்டரில் ஸ்டாலின் போடும் குத்துச்சண்டை.!!

By Thiraviaraj RMFirst Published Feb 14, 2020, 10:32 AM IST
Highlights

அதிமுக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி கொடுத்தது என்னாச்சு.? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு; என அ.தி.மு.க. போட்டு வரும் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் சாயம் வெளுத்து விட்டது என்று அதிரடி கிளப்பி வருகிறார் ஸ்டாலின். 

By; T.Balamurukan

அதிமுக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி கொடுத்தது என்னாச்சு.? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு; என அ.தி.மு.க. போட்டு வரும் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் சாயம் வெளுத்து விட்டது என்று அதிரடி கிளப்பி வருகிறார் ஸ்டாலின். 

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

 அதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் போஸ்டில்..,'
"ஜப்பான் யொகோகாமா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினருடன் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் இடைவிடாத தொடர்பில் உள்ளது. இந்தியப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவி மற்றும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன. கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் ஊழியர்கள் ஜப்பான் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்." என தெரிவித்துள்ளார்.

 மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு நன்றி. நமது தூதரக அதிகாரிகள் கப்பலில் உள்ள இந்திய பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை செய்வதுடன், கப்பலில் உள்ளவர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து அங்குள்ள நிலைமையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கவேண்டும். கடந்த மூன்று ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் மேல் டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அ.தி.மு.க. போட்டு வரும் இரட்டை வேடம் இது." என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!