ரஜினியுடன் கூட்டணி...! தைலாபுரத்தை அதிர வைத்த சென்னை க்ரீன்வேஸ் சாலை..!

By Selva KathirFirst Published Feb 14, 2020, 9:41 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி தலைமையிலான அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று ஏற்கனவே நாம் எழுதியிருந்தோம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஜினியின் நண்பர் தமிழருவி மணியன், ரஜினி தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பாமக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது.

ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி யோசிக்கலலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதை கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டென்சனின் உச்சத்திற்கே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி தலைமையிலான அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று ஏற்கனவே நாம் எழுதியிருந்தோம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஜினியின் நண்பர் தமிழருவி மணியன், ரஜினி தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பாமக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது.

இந்த சூழலில் பாமக ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்று தமிழருவி மணியன் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனென்றால் கடந்த 2014 தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்ததேமுதிக மற்றும் பாமகவை பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைத்ததில் தமிழருவி மணியனுக்கு முக்கிய பங்கு உண்டு. பாமக – தேமுதிக ஒரே அணியில் சேரும் என்று தமிழருவி மணியன் கூறிய போது அதனை நமட்டுச் சிரிப்புடன் அனைவரும் கடந்து சென்றனர். ஆனால் அதனை சாத்தியமாக்கி காட்டினார் தமிழருவி.

அதே  தமிழருவி தான் ஒரு காலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ரஜினியும் – ராமதாசும் ஒன்றாக சேர்வார்கள் என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ராமதாஸ் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழருவி மணியன் கூட்டணி குறித்து கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்தது யோசிக்கலாம் என்று கூறி அதிரடி கிளப்பினார்.

உடனடியாக இந்த செய்தி அனைத்து செய்தி சேனல்களிலும் பிரேக்கிங் செய்தியானது. ஒரு சிலர் அடுத்த கட்டத்திற்கு சென்று திரைமறைவில் பாமக – ரஜினி தரப்பு பேசி வருவதாக செய்திகள் வெளியிட்டனர். இந்த செய்தி சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை எட்டியது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் கொடுக்காத அளவிற்கு சீட், ராஜ்யசா எம்பி பதவி மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்கள் ஏன் சேலம் மாவட்டத்தையே பாமகவிற்கு கொடுத்தது அதிமுக.

இவ்வளவு செய்த பிறகும் ரஜினியுடன் கூட்டணி குறித்து பேசலாம் என்று ராமதாஸ் பேசியது எடப்பாடி தரப்பை டென்சன் ஆக்கியுள்ளது. அப்படி என்றால் சட்டமன்ற தேர்தலில் தனது கணக்கு என்ன ஆவது என்று கொதித்துள்ளார் எடப்பாடியார். உடனடியாக அவருக்கான அரசியல் விவகாரங்களை கவனிக்கும் தளவாய் சுந்தரம் தைலாபுரத்தை தொடர்பு கொண்டு இது தான் கூட்டணி தர்மமா என்று சீறியதாக சொல்கிறார்கள். எங்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டே ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்று கூறுவது எப்படி முறையாகும்என்று கொந்தளித்துள்ளனர்.

இந்த அளவிற்கு எடப்பாடி தரப்பிடம் இருந்து காட்டமான ரியாக்சன் வரும் என்று ராமதாஸ் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். இதனால் ஒரு கனம் தைலாபுரம் அதிர்ந்துள்ளது. எனவே தான் மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ரஜினியுடன் கூட்டணியா என்கிற கேள்வியே அபத்தம், அதற்கு நான் சொன்ன பதிலை பத்திரிகைகள் திரித்து வெளியிட்டுவிட்டதாக கூறி ராமதாஸ் சமாளித்தார். ஆனால் ரஜினியுடன் கூட்டணி என்று அவர் கூறிய வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் தற்போதும் உள்ளது.

click me!