காமராஜர்... எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் எடப்பாடி... அதிரடி அறிவிப்பு இன்று வெளியாகிறது..?

By vinoth kumarFirst Published Feb 14, 2020, 9:32 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. காமராஜர் கொண்டு வந்த இந்த திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. 43 ஆயிரம் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவால் சுமார் 50 லட்சம் மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. காமராஜர் கொண்டு வந்த இந்த திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. 43 ஆயிரம் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவால் சுமார் 50 லட்சம் மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 320 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவுகள் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலை உணவு திட்டத்துக்கு சென்னை மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையில் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பள்ளி-கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய 2 துறைகளும் இணைந்து இதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காலை உணவுத் திட்டத்தில், தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால் 65 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். 

click me!