தமிழக அரசின் பட்ஜெட் ஆரம்பம்.! அனலை கக்க காத்திருக்கும் எதிர்கட்சிகள்.!

By Thiraviaraj RMFirst Published Feb 14, 2020, 9:35 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்து 4ம் ஆண்டு தொடங்குகிறது. 2020-21ஆண்டிற்கான பட்ஜெட் இது. நிதியமைச்சர் பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய சலுகைகள் வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் என்பதாலும்,கடைசி பட்ஜெட் என்பதாலும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

By: T.Balamurukan

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளை கவர விவசாயக் கடன்கள் தள்ளுபடி? இருக்கும் என்கிற ரீதியில் விவசாயிகள் கனவு காண்கின்றார்கள். கடந்த காலங்களில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்பது ஜூன் மாதங்களிலேயே நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு முன்னதாக மானியக் கோரிக்கை விவாதத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு. 

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். அதில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே, அது குறித்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள், காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் நடந்த ஊழல் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது,

click me!