இது உங்களுக்கு தெரியுமா? இல்ல எதையுமே தலைகீழாகச் செய்வது உங்க ஸ்டைலா? எடப்பாடியை எகத்தாளமாக பேசிய ஸ்டாலின்.!

Published : Nov 05, 2020, 12:56 PM ISTUpdated : Nov 05, 2020, 01:05 PM IST
இது உங்களுக்கு தெரியுமா? இல்ல எதையுமே தலைகீழாகச் செய்வது உங்க ஸ்டைலா? எடப்பாடியை எகத்தாளமாக பேசிய ஸ்டாலின்.!

சுருக்கம்

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கவில்லை என கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என நிரூபிக்கப்படாத நிலையில் அவசரமாக நவம்பர் 16 முதல் பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்.தி.மு.க. சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை எனக் கூறுவதற்காக இப்போது கண்துடைப்பு கருத்துக் கேட்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு. இந்தக் கருத்துக்கேட்பை, பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பு அல்லவா செய்திருக்க வேண்டும்? 

ஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரவி வருவதாக வந்துள்ள செய்தி அரசுக்குத் தெரியுமா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வதுதான் அ.தி.மு.க. அரசா? எனவும் வினாவியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!