தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது..!! வயிற்றில் பால்வார்த்த சுகாதாரத்துறை அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2020, 12:49 PM IST
Highlights

கொரோனாதொடக்கத்தில் கிங் இன்ஸ்டியூட்டில் ஒரு ஆய்வகம், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை வசதிகள் என தொடங்கப்பட்டு தற்போது  203 ஆய்வகங்கள், 1.39 லட்சம் படுக்கைகள் அமைத்து வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  அம்மாவின் அரசு முதலமைச்சரின் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது தொற்று கண்டறியபடுபவர்களின் விகிதம் மற்ற மாநிலங்களை விட மிகக் குறைவாக 3.5 சதவீதமாக உள்ளது.  

RT PCR test the golden standard test for covid testing. தமிழ்நாட்டில் இதுவரை 66 அரசு, 138 தனியார் பரிசோதனை கூடங்கள் என மொத்தம் 203 பரிசோதனை  கூடங்கள் மூலம் 10,099, 519 அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளான அமெரிக்காவில் கூட ஆர்.டி.பி, சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறுவதற்கு ஏழு நாட்கள் தேவைப்பட்டது. அது தற்பொழுது மூன்று நாட்களாக குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தொடக்கத்தில் 24 மணி நேரம் தேவைப்பட்ட நிலையில் தற்போது 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாதொடக்கத்தில் கிங் இன்ஸ்டியூட்டில் ஒரு ஆய்வகம், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 10 படுக்கை வசதிகள் என தொடங்கப்பட்டு தற்போது  203 ஆய்வகங்கள், 1.39 லட்சம் படுக்கைகள் அமைத்து வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால், முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
 

click me!