தப்பி தவறிக்கூட சசிகலாவை விமர்சிக்காத முதல்வர்... டிடிவி.தினகரனையும், ஸ்டாலினையும் எகிறி அடித்த எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Nov 24, 2019, 5:37 PM IST
Highlights

கட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய் படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார்.

டிடிவி.தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம். தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன் கூட்டணி அமைத்தாலும், அது வலுவான கூட்டணியாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் பிரித்து பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிமுக அரசு என்ன சாதனை செய்தது என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறார். சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலம் 5.11 லட்சம் மக்களின் குறைகளை தீர்த்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 1974-ல் முதன் முதலாக அதிமுக கொடி கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதை பிடுங்கி எரிந்தனர். அன்று ஆரம்பித்த கொடி கம்ப பிரச்சனை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார்.

click me!