மன் கி பாத்தில் ஒலித்த பாரதியார் பாடல்..! மீண்டும் தமிழை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி..!

By Manikandan S R SFirst Published Nov 24, 2019, 4:11 PM IST
Highlights

'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்கிற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி தேச நலனை விட இந்தியர்களுக்கு பெரிது ஒன்றும் இல்லை என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமையில் நாட்டு மக்களுக்கு வானொலி மூலமாக உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு 'மன் கி பாத்' பெயரிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறான இன்று பிரதமர் இந்நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அயோத்தி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு வெளிவந்த பிறகு மக்கள் காட்டிய பொறுமையை பாராட்டிய மோடி, இதன்மூலம் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தனது உரையின் இடையே பாரதியாரின் பாடல் வரிகளை பிரதமர் மேற்கோள் காட்டியுள்ளார். 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்கிற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி தேச நலனை விட இந்தியர்களுக்கு பெரிது ஒன்றும் இல்லை என்றார். அதை 130 கோடி மக்களும் நிரூபித்திருப்பதாக கூறினார்.

'பிட் இந்தியா' இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் இதில் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

click me!