AIADMK : அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடாது..காவல்துறைக்கு மனு கொடுத்த ஓபிஎஸ்.! மீண்டும் பரபரப்பு

By Raghupati RFirst Published Jun 21, 2022, 5:59 PM IST
Highlights

AIADMK : கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. 

அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதிக்கப்பட்டது.  கூட்டத்திற்கு உள்ளேயே ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். இந்நிலையில், பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதிசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி தரக் கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அனுமதி கோரியுள்ளார். பெஞ்சமின் பாதுகாபபு கோரியது தன்னிச்சையான முடிவு என்பதால் அனுமதி மறுக்க வேண்டும்.

பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தின் நகர் வானகரம் திருமண மண்டபத்தின் மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் கையெழுத்திட்ட மனு ஆவடி ஆணையரகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக் குழுவை தள்ளி வைக்க ஏற்கெனவே இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என இபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்

click me!