அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி...சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி.. உடைந்து நொறுங்கிய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2022, 8:57 PM IST
Highlights

அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அதிமுக பொதுக்குழுவில் திட்டமிட்டு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அதிமுக பொதுக்குழுவில் திட்டமிட்டு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி கே சி பழனிச்சாமி என் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தடை விதிக்கவேண்டும், சட்ட விதிகள் படி நிர்வாக ரீதியாக பொதுக்குழு கூட்ட பொதுச் செயலாளர் மட்டுமே அதிகாரம் உள்ளது. மேலும் பொதுக்குழு, செயற்குழு, ஆட்சிமன்றக் குழு உட்கட்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி  கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மான நகல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 23 தீர்மானங்களுடன் கட்சி அலுவலத்தில் இருந்து ஈமெயில் வந்தது,அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன் ஆனால் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீரிமானங்களையும் அனுமதிக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறுகையில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்களை காட்டிலும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் ஆனால் எந்த முடிவு எடுக்க வேண்டும் எடுக்கக்கூடாது என்பது குறித்து முன்கூட்டியே உத்தரவாதம் தர முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி மாறி மாறி இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி  தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.  அதன் விவரம் பின்வருமாறு:- 

அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும், மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளை திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது.

கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. வழக்கில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு ஜூலை 11ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. 

அதிமுக பொதுக்குழு வை நடத்திக்கொள்ளலாம் அதற்க்கு எந்தவித தடையுமில்லை பொதுக்குழுவில் திருத்தங்கள் கொண்டுவர தடையில்லை என கூறியுள்ளது முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்க உள்ளது, அதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. 


 

click me!