மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்கள்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு தற்போது அலையடிக்கிறது. திமுகவுக்கு தவறுதலாக மக்கள் வாக்களித்துவிட்டதாக எண்ணி, தற்போது ஒற்றுமையாக அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். தற்போது மதுரை மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
சிறுபான்மையினர் அதிகளவில் தற்போது பிரச்சார கூட்டத்திற்கு வந்து ஆதரவளிக்கின்றனர். 10 ஆண்டு காலம் அதிமுக சிறப்பான ஆட்சி செய்தது அவர்களை தோல்வியடைய செய்திருக்ககூடாது என மக்கள் எண்ணி அலைகடலென அதிமுகக்கு தற்போது ஆதரவு தெரிவிக்கின்றனர்.
undefined
2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சிதான் அமாவாசை ஆட்சி அவர்கள் காலம்தான் மின்சாரம் இல்லாமல் இருட்டில் அமவாசையாக ஆட்சி செய்தனர். திமுக ஸ்டாலின் எப்போதும் பொய்தான் பேசுவார். சட்டமன்ற தேர்தலில் நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின். தற்போது நகர்புற தேர்தலில் ஏன் மக்களை சந்திக்காமல் காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்கிறார்.
மக்கள் கேள்வி கேட்டுவிடுவார்கள் பதில் சொல்லமுடியாது என்ற பயத்தில் நேரடியாக பிரச்சாரம் செய்ய திமுக அரசு ஸ்டாலின் வராமல் காணொலியில் பிரச்சாரம் செய்கிறார். கூட்டுறவுத்துறையின் மூலம் கடந்த ஆட்சியில் தரமான பொருட்களை ரேசன்கடைகள் மூலம் அனைவருக்கும் வீடுவீடாக வழங்கினோம். ஆனால், திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு சரியில்லை.
இதனால் நிச்சயமாக இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுகவை தோல்வியடைய செய்வார்கள். தம்பி உதயநிதி உங்களுக்கு தெரியாது, ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. இப்போது பிரதமராக மோடி இருக்கிறார். ஏதாவது பேசி உங்கள் அப்பா ஸ்டாலின் ஆட்சிக்கு மோசம் செய்து விடாதே தம்பி.
பாஜக வளர்கின்ற கட்சி தமது வேட்பாளர்களையும், தொண்டர்களையும் முன்னிலைபடுத்தி உற்சாகபடுத்துவதற்கு பாஜக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். பொதுவாக எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் கட்சியை முன்னிலைபடுத்த தான் செய்வார்கள். அதையெல்லாம் நாங்கள் கருத்தில் கொள்வதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.