தற்போது சசிகலா அதிமுகவில் நுழைவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளதால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அந்த கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுக கொடியை நாங்கள் மட்டுமல்ல அவர்களும் பிடிக்கலாம். யாரும் பிடிக்கலாம்.
அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைத்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா தெரிவித்தார்.
சசிகலாவை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓர் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அண்ணா கற்று கொடுத்த கொள்கை. அதுதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை என்று எடப்பாடியை பெயர் குறிப்பிடாமல் நேரடியாகவே விமர்சித்தார். மேலும், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாத மக்கள் விருப்பம். அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என கூறியது அதிமுகவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இதையும் படிங்க;- அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு கரம் நீட்டும் செல்லூர் ராஜூ..!
இதனையடுத்து, ஓபிஎஸ் இந்த கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சசிகலாவையும் அவரை சார்ந்தவர்களையும் எதிர்த்துத்தான் தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார் என ஜெயக்குமார் கூறினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று பாராமல் ஜெயக்குமார் விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், ஓபிஎஸ் கூறியதில் எந்த தவறும் இல்லை என ஜேசிடி பிரபாகர், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இதனால், அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- பேசும் போதே எனக்கு இவ்வளவு உற்சாகம் பிறக்கிறதே.. உங்களை சந்தித்தால் எவ்வளவு உற்சாகம் பிறக்கும்? ராமதாஸ்..!
இந்நிலையில், ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.அன்வர்ராஜா பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் மரியாதை செலுத்த வரும்போது வரவில்லை. அவர்கள் சென்ற பிறகு தனது ஆதரவாளர்களுடன் தனியாக வந்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்வர்ராஜா;- தற்போது சசிகலா அதிமுகவில் நுழைவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளதால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அந்த கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுக கொடியை நாங்கள் மட்டுமல்ல அவர்களும் பிடிக்கலாம். யாரும் பிடிக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை எனது கருத்து என்றார். அதிமுகவில் ஏற்கனவே ஓபிஎஸ் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலை முன்னாள் எம்.பி.யும் ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக அடுத்தடுத்து நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.