முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ரெய்டு... கொண்டாடும் அதிமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published Sep 17, 2021, 12:45 PM IST
Highlights

டாப் டென் வரிசையில் இருந்தது திருப்பத்தூர் மாவட்டத்தைச்  சேர்ந்த வீரமணியும் ஒருவர் என்கிறார்கள். இவர், அதிமுக ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகாலம் அமைச்சர் பதவி வகித்து வந்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்தபோது மற்ற மாவட்டங்களில் கொந்தளித்து போய் கட்சிக்காரர்கள் போராட்டங்களை நடத்தினர். ஆனால், திருப்பத்தூரில் எல்லாம் தலைகீழ் திருப்பம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்கள் மக்களுக்கு நல்லது செய்தார்களோ இல்லையோ, சொந்தமாக சொத்து சேர்க்கிற வேலை ஜரூராக நடந்தது.

 

இந்த லிஸ்டில் டாப் டென் வரிசையில் இருந்தது திருப்பத்தூர் மாவட்டத்தைச்  சேர்ந்த வீரமணியும் ஒருவர் என்கிறார்கள். இவர், அதிமுக ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகாலம் அமைச்சர் பதவி வகித்து வந்தார். அமைச்சர் பதவியை மக்கள் பிரச்னைய தீர்க்குறதுக்கு பயன்படுத்தியதை விட, சொத்து  சேர்ப்பதில் தான் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று வீரமணிக்கு சொந்தமான, நெருக்கமான இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். 

அத்தோடு இல்லாமல் சென்னை தொடங்கி பெங்களூரு வரையில ஸ்டார் ஓட்டல், அக்ரி காலேஜ், சிமென்ட் பேக்டரி என ஏராளமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில்,  வீரமணியின் சொத்து குவிப்பு விவகாரம் தெரிய வந்து ’இவ்வளவு சொத்தா, சேத்துவெச்சிருக்காரு’என ஜனங்களே வாயைப்பிளந்தார்கள். 

இதற்கிடையில், ஆக்டோபஸ் போல நாலாபுறமும் சொத்துக்களை குவிச்சுகிட்டு வந்த வீரமணி மீது அதிமுக நிர்வாகிங்களே ரொம்ப அதிருப்தியில்  இருந்திருக்கிறார்கள். அடிமட்ட தொண்டர்களையும் அவர் கண்டுகொண்டதே இல்லை. ஜால்ரா அடிக்குற நிர்வாகிகளை மட்டும் பினாமிகள் ஆக்கி கொண்டார். மூத்த  நிர்வாகிங்களை ஓரங்கட்டி விட்டார். இப்படி சர்வாதிகாரி போல செயல்பட்டு  வந்த வீரமணி அமைச்சர் வீடு, உட்பட சொந்தமான பல இடங்களில் நடந்த ரெய்டு மேட்டரை கேட்டதும் அதிமுக நிர்வாகிகள் படு குஷியாகி இருக்கிறார்கள். அதோடு, ரெய்டில் விடுபட்ட பினாமியான முக்கிய நிர்வாகிகள் நமது ஏரியாவிலும் ரெய்டு நடத்துவார்களோ என உஷாராகி வருகிறார்கள். இதனால் பினாமிகள், பல கைகளை மாத்தி, சொத்துக்களை சேமித்து வைத்திருப்பதாக கூறுகிறார்கள். 

click me!