சும்மா கெத்தா.. கம்பீரமா, பெரியாருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. வைரலாகும் ஒற்றை புகைப்படம்.

Published : Sep 17, 2021, 12:16 PM IST
சும்மா கெத்தா.. கம்பீரமா, பெரியாருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. வைரலாகும் ஒற்றை புகைப்படம்.

சுருக்கம்

தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . 

தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 143வது பிறந்த தினம் தமிழர்கள் எங்கெல்லாம் பரவிக் கிடக்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என சுயமரியாதையை தமிழர்களுக்கு ஊட்டியவர் தந்தை பெரியார், மூடநம்பிக்கை என்னும் இருட்டில் உழன்ற தமிழ்ச் சமூகத்தை பகுத்தறிவு ஊட்டி அறிவு பகலவனாய் பட்டொளி வீசி மறைந்தவர் தந்தை பெரியார். அவர் வகுத்த சுயமரியாதைச் சிந்தனை, பகுத்தறிவு தமிழகத்தை பண்படுத்தி இருக்கிறது என்றால் மிகையல்ல. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவித்ததன்படி இன்று பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் இன்று காலை பெரியார் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, மா. சுப்ரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆ. ராசா, அமைச்சர்கள் ஆவடி நாசர், மு.பெ. சாமிநாதன், ரகுபதி. வி.மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரியார் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணாசாலையில் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சமூக நீதி நாளுக்கான உறுதியேற்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சமூகநீதி காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சமூகநீதி உறுதிமொழி ஏற்றார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பெரியாருக்கு மரியாதை செலுத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!