நிர்வாண கோலத்துடன் தகராறில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி ; பதவியை பறித்த அதிமுக

By Kanmani PFirst Published Nov 15, 2021, 4:01 PM IST
Highlights

குடிபோதையில் நிர்வாணமாக தகராறில் ஈடுபட்ட நீலகிரி அதிமுக முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணனின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்த தேர்தலில் கோபாலகிருஷ்ணனை எதிர்த்து திமுக சார்பில் ஆ.ராசாவை பின்னுக்கு தள்ளி கோபிகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு மக்களை கண்டுகொள்ளாத கோபாலகிருஷ்ணன் குறித்த அடதடி சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில்  காவல்துறையினரை அடாவடியாக மிரட்டும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. இது போன்ற அர்ஜகத்தால் மக்கள் செல்வாக்கை இழந்த கோபால கிருஷணனுக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில்  எம்.பி சீட் வழங்காமல் அதிமுக தலைமை கைவிரித்தது.

இந்நிலையில் ஒரு வீடியோவால் வாய்ப்பிழந்த கோபாலகிருஷ்ணன் மீண்டும் ஒரு வீடியோவால் காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளார்.  சமீபத்தில் தலைக்கேறிய போதையில் வேறொருவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்து கோபாலகிருஷ்ணன் உதை வாங்கிய வீடியோ தான் அது.


 கடந்த தீபாவளி தினத்தன்று தலைக்கேறிய போதையில் தள்ளாடியபடி   கோபாலகிருஷ்ணன், திடீரென முத்தாலம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அதைக் கண்ட வீட்டு உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட பதிலுக்கு, கோபாலகிருஷ்ணனும் வாக்குவாதம் செய்ய, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கோபி கோபிகிருஷ்ணனை  சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அத்துடன் நிர்வாண நிலையிலிருந்த கோபாலகிருஷ்ணனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார். 

பின்னர் முன்னாள் எம்.பி-யின் ஆதரவாளர்களை அவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, கோபி குன்னூர் காவல்நிலையத்தில் தான் பதிவு செய்த வீடியோவுடன் கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்தார்.

அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவரைத் தாக்கிய கோபி மீதும் 294(B),323,506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தான் தாக்கப்பட்டதாகக் கூறி கடந்த 5ஆம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு போட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மாவட்ட அவைத்தலைவர் பதவியில் இருந்து கோபாலகிருஷ்ணனை  நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

click me!