அதிமுகவில் கட்டம் கட்டப்படும் முன்னாள் அமைச்சர்... கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்..?

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2021, 11:00 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் பாஸ்கரனை கழட்டிவிட்ட மாவட்ட அதிமுகவும், அவரை கட்சியில் இருந்து நீக்க புகார்களை தட்டிவிடுவதால் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் பாஸ்கரனை கழட்டிவிட்ட மாவட்ட அதிமுகவும், அவரை கட்சியில் இருந்து நீக்க புகார்களை தட்டிவிடுவதால் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

சிவகங்கையில் கோயில் நிலத்தை மோசடியாக அபகரித்த விவகாரத்தில் ‘தனக்கு எதுவும்  தெரியாது’என வெளியே பேசினாலும், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உள்ளுக்குள்  நடுங்கிக் கொண்டிருப்பதாக, அதிமுகவினர் வெளிப்படையாகவே பேசி  வருகின்றனர். இதில் இருந்து தப்பிக்க எடுத்த முயற்சிகளையும் அறநிலையத்துறை  அமைச்சர் வெளிப்படையாக சொன்னதால்...  பாஸ்கரனுக்கு டென்ஷன் எகிறிவிட்டதாம். 

‘இதில் இருந்து  தப்பிக்கவே முடியாது போல’என தன்னை பார்க்க வருபவர்களிடம் எல்லாம் புலம்பி  வருகிறாராம். ஏற்கனவே தேர்தலில் எம்எல்ஏ சீட்  கூட கொடுக்காமல் தலைமை புறக்கணித்தது. ஆதரவாளர்கள் தீக்குளிப்பு என சீன் போட்டும் கதையாகவில்லை. தற்போது கட்சி பதவி எதிலும் இல்லாத நிலையில் அவரை அதிமுகவிலிருந்து கட்டம் கட்டுவதற்கான பணிகளில், இவரது எதிர்தரப்பினர் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். இதனால் புகார்களை தட்டி விடுகிறார்கள். ஒருபுறம் ஆக்கிரமிப்பு விவகாரத்தால் அரசு எடுக்கும் அதிரடி, மறுபுறம் சொந்தக்கட்சியிலேயே புறக்கணிப்பு என அடுத்தடுத்து விழும் அடிகளால் பாஸ்கரன் திக்கற்று நிற்கிறார். 

click me!