பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்

By Raghupati R  |  First Published Nov 11, 2022, 3:06 PM IST

தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி வருகை:

Latest Videos

undefined

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு செல்கிறார். அங்கு அவரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இதையும் படிங்க..மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

கனமழை:

தமிழகத்தில் மழை பெய்துவருவதால் வானிலை சரியாக இருக்கும்பட்சத்தில் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார். இல்லையென்றால் சாலை மார்க்கமாகவே அவர் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பயணம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருப்பதாக நேற்றே தகவல் வெளியானது.

எடப்பாடி Vs பன்னீர்செல்வம்:

இந்த இருவரில் ஒருவர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரும்போது வரவேற்கவும், மற்றொருவர் பிரதமர் மோடி திரும்பி செல்லும்போது ஒருவர் வழியனுப்புவதாகவும் இருவருக்குமே அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

ஏற்கனவே ஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடி வந்த போது, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டு, விமான நிலையத்தில் பிரதமர் இறங்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கும், திரும்பிச் செல்லும்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நேரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி உடனான சந்திப்பு எப்படி இருக்கும் என்று விரைவில் தான் தெரியும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

click me!