மக்களை முட்டாளாக்கும் அதிமுக, திமுக.. ஒரே நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை அலறவிட்ட பிரேமலதா விஜயகாந்த்.!

Published : Feb 08, 2022, 05:16 AM IST
மக்களை முட்டாளாக்கும் அதிமுக, திமுக.. ஒரே நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை அலறவிட்ட பிரேமலதா விஜயகாந்த்.!

சுருக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது ஆளுங்கட்சியினுடைய பணம், ஆட்சி, அதிகாரம் என அனைத்து பலத்தையும் எதிர்த்து உண்மை, நேர்மை, லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தேமுதிக, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக்கிற மாதிரி தெரியும், ஆட்சியில் இல்லாதவர்கள் அதிகாரமற்றவர்கள் போன்று தெரியும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விஜயகாந்த் பரப்புரை செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தேமுதிக  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த புழலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக  பொருளாளர் பிரேமலதா;- பணபலம், ஆட்சி பலம், அதிகார பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடுகிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது ஆளுங்கட்சியினுடைய பணம், ஆட்சி, அதிகாரம் என அனைத்து பலத்தையும் எதிர்த்து உண்மை, நேர்மை, லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தேமுதிக, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக்கிற மாதிரி தெரியும், ஆட்சியில் இல்லாதவர்கள் அதிகாரமற்றவர்கள் போன்று தெரியும்.

எப்படியிருப்பினும் உறுதியாக கேப்டனுக்கும், எங்கள் வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களித்து மாபெரும் வெற்றி வாய்ப்பை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால், திமுகவும், அதிமுகவும் இதை மிகப் பெரிய அரசியலாக ஆக்குகிறார்கள். 

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு, அது குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுவும் தற்போது திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று பலர் தெள்ள தெளிவாகக் கூறுகின்றனர். இதை தெரிந்திருந்தும் அதிமுகவும், திமுகவும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை பிரேமலதா விஜயகாந்த்  கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!