தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகர திட்டங்களை சேர்ப்பது தொடர்பாக அதிமுக ஆலோசனை.. அமமுக, திமுகவை விஞ்ச தீவிரம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 3:54 PM IST
Highlights

எனவே திமுக, அமமுக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் வெளியாக உள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகர திட்டங்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  

அமமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் வெளியீடப்பட்டுள்ள நிலையில், அதிமுக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிற கட்சிகளை காட்டிலும் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. அதிமுகவின் எதிரிகளான அமமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அதிரடியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன.  

குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை பெண்கள், இளைஞர்கள், மற்றும் இந்து சமூதாயத்தினரை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்று நடுத்தர ஏழை எளிய,  விவசாய பெருங்குடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  அமமுக-திமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். எனவே விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ள அதிமுக, தனது எதிரி கட்சிகளின் அறிக்கையை பின்னுக்கும் தள்ளும் வகையில் சிற்பானதாக தயாரிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. எனவே எளிதில் மக்களை கவரும் வகையில்  அறிக்கையை தயாரிக்கவும், அவ்விரு கட்சிகள் சொல்லாததை தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்யவும் அதிமுக முடிவு செய்துள்ளது. 

எனவே திமுக, அமமுக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் வெளியாக உள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகர திட்டங்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் அமைச்சர் ஜெயக்குமார், வேணுகோபால், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் உள்ள பொன்னையன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் சென்னையில் இல்லாத நிலையில், குழுவில் இல்லாத மூத்த அமைச்சர் ஜெயக்குமார் இதில் பங்கேற்றுள்ளார்.  
 

click me!