திமுகவிற்கு பல்டி அடித்த அதிமுக கவுன்சிலர்கள்..! ஊராட்சியையும் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி

By Ajmal Khan  |  First Published Oct 3, 2022, 3:28 PM IST

குளித்தலை ஊராட்சியை சேர்ந்த அதிமுகவை  கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த காரணத்தால், குளித்தலை ஊராட்சியை திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.


திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 90 சதவிகித இடங்களை கைப்பற்றியது. மாநகராட்சியையும் முழுமையாக கைப்பற்றியது, ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான உள்ளாட்சி இடங்களை திமுக கைப்பற்றி இருந்தாலும் குளித்தலை ஊராட்சியை அதிமுக கைப்பற்றியிருந்தது, மொத்தமுள்ள 10 இடங்களில் 6 இடங்களில் அதிமுகவும், 4 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தது. அதனால் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் அ.தி.மு.க. வசமானது. இதையடுத்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த விஜயவிநாயகம் ஒன்றியக்குழு தலைவராகவும், இளங்கோவன் துணைத்தலைவராகவும் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றியக்குழு கவுன்சிலர்களான அறிவழகன், ராஜேஸ்வரி ஆகியோர் நேற்று கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். 

Tap to resize

Latest Videos

பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்

குளித்தலை ஊராட்சியை கைப்பற்றிய திமுக

இதே போல அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரும் திமுகவிற்கு ஆதரவளித்தார். இதன் காரணமாக குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 3 ஆக குறைந்துள்ளது. திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து  குளித்தலை ஊராட்சியை அதிமுக இழந்துள்ளது. இதன் காரணமாக விரைவில் குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குளித்தலை ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயரை திமுக தலைமை விரைவில் அறிவிக்கவுள்ளது.

இதையும் படியுங்கள்

தூய்மையற்ற மாநிலமாக தமிழகம்.! சென்னை,மதுரைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?- ஸ்டாலினுக்கு எதிராக சீறும் ஓபிஎஸ்

click me!