அமைச்சர்களின் அடாவடி பேச்சு எதிராக களத்தில் இறங்கிய டிடிவி.தினகரன்.. வெளியான முக்கிய அறிவிப்பு

By vinoth kumar  |  First Published Oct 3, 2022, 3:05 PM IST

அரசுத்துறைகள் தோறும் மலிந்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக். 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமமுக கட்சித்தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்: அரசுத்துறைகள் தோறும் மலிந்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக். 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Latest Videos

அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்க உள்ளார். அதே நாளில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டங்களில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன. அந்தந்த வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட  கழக மாவட்டங்கள் ஒன்றிணைந்து திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு / வட்ட கழகம் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

click me!