குடிமகன்கள் கவனத்திற்கு .. வரும் 9 ஆம் தேதி பாண்டிக்கு போனாலும் சரக்கு கிடைக்காது.. வெளியான உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2022, 2:00 PM IST
Highlights

அக்டோபர் 9ஆம் தேதி மிலாது  நபியை ஒட்டி மதுபான கடைகளை மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மீறுவோர் மீது கலால் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதி மிலாது  நபியை ஒட்டி மதுபான கடைகளை மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மீறுவோர் மீது கலால் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு வாணிபக்  கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், மற்றும் அதை ஓட்டியுள்ள மது அருந்தும் பார்கள் அனைத்தையும் காந்தி ஜெயந்தி, மற்றும் மிலாதுநபி அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவின்படி நேற்று காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டன. இதேபோல வரும் 9-ஆம் தேதி மிலாது நபியை முன்னிட்டு கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  சிவன், முருகன், சோழர்கள் இந்துக்கள் இல்லை, சைவர்கள்.. என் தம்பி வெற்றிமாறன் பேசியது பெருமையாக உள்ளது. சீமான்.

அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பார்களில் வைத்து மதுபானம் விற்பனைசெய்வது தெரிய வந்தாலும், பார்களின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் மகனை கைது செய்ய வேண்டும்..! தேனி மாவட்டத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

இந்நிலையில் புதுச்சேரி மாநில காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி மிலாது நபியை யொட்டி புதுச்சேரி அரசு கலால் ஆணையர் அவர்களின் ஆணைப்படி, மதுபானக் கூடங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, காரைக்கால்,  மாஹி, ஏனாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து மதுபானங்களும், கல், சாராயம், பார் உட்பட அனைத்து வகை மதுபானங்களும், மற்றும் பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் எல்லாவிதமாற மதுக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது புதுச்சேரி கலால்துறை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

click me!