சிவன், முருகன், சோழர்கள் இந்துக்கள் இல்லை, சைவர்கள்.. என் தம்பி வெற்றிமாறன் பேசியது பெருமையாக உள்ளது. சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2022, 1:21 PM IST
Highlights

சிவனும், முருகனும், இந்துக்கள் அல்ல அவர்கள் சைவர்கள் என்றும், சோழர்களை இந்துக்களாக அடையளப்படுத்துவதை அனுமதிக்க கூடாது என என்தம்பி வெற்றிமாறன் பேசியிருப்பது பெருமையாக உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

சிவனும், முருகனும், இந்துக்கள் அல்ல அவர்கள் சைவர்கள் என்றும், சோழர்களை இந்துக்களாக அடையளப்படுத்துவதை அனுமதிக்க கூடாது என என்தம்பி வெற்றிமாறன் பேசியிருப்பது பெருமையாக உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சோழர்களையும்  சிவனையும் இந்துக்களாக அடையாளப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ள நிலையில் சீமான் இவ்வாறு அதை வரவேற்றுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 60வது பிறந்த நாளை மணி விழாவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சமத்துவ மக்கள் எழுச்சி ஒன்றுசேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்படம் வெளியாட்டு விழா நடைபெற்றது. சென்னையில் நடந்த அந்த விழாவில் பிரபல திரை இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திரைத்துறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கையில் இருந்தது அவர்களிடத்தில் இருந்து அதை பொதுமைப்படுத்தியது திராவிட இயக்கம்தான்.

இதையும் படியுங்கள்: உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நீ என்ன வேணாலும் பேசுவ.. எச்.ராஜாவை டரியில் ஆக்கிய சீமான்.

அதனால்தான் இன்று தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக இருக்கிறது, வெளிப்புற சக்திகள் ஊடுறுவலை தடுக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு பக்குவப்பட்டு இருக்கிறது. சினிமா என்பது மக்களை மிக எளிதில் சென்றடையக் கூடிய கலைவடிவம், அதை நாம் அரசியல் படுத்துவது அவசியம் என்றார். அதை சரியாக கையாள வேண்டும், தவறினால் வெகு சீக்கிரம் நமது அடையாளங்கள் பறிக்கப்படும், நம் அடையாளங்கள் பல பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது, வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,  ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றுவது போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. சினிமாவிலும் நடக்கிறது, இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் இந்த கருத்தை குறிப்பாக பாஜகவினர் எதிர்த்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் இந்த கருத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி வரவேற்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், அருள்மொழி சோழனை இந்து மன்னர் என்று பேசுவது  வேடிக்கையான ஒன்று, கேவலமான ஒன்று, அந்த காலத்தில் நாடும் கிடையாது மதம் கிடையாது என்பது உலகத்துக்கே தெரியும். 

இதையும் படியுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கையை கட்டிப்போட்டு.. கொழுப்பெடுத்த அமைச்சர்கள் ஆணவம்.. செல்லூர் ராஜூ பகீர்.

அன்றிருந்தது சைவம் மட்டும்தான.  தமிழர் அடையாளங்களில் புகழ்பெற்றவர்கள் இருக்கிறார்கள். அது சிவனாக இருக்கட்டும், முருகனாக இருக்கட்டும் அது யாராக இருந்தாலும் ஆரியர்கள் தங்களுக்கானவர்களாக மாற்றிக்கொள்வார்கள். எனவே இதையெல்லாம் அனுமதிக்கக்கூடாது என என் தம்பி வெற்றிமாறன் பேசியிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. என இனத்திற்கு பெருமை, இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!