ஈரோடு இடைத்தேர்தலில் ஒரே நாளில் 3 கூட்டணியை மாற்றிய அதிமுக..! பதற்றத்தில் இருக்கிறாரா இபிஎஸ்.?

By Ajmal KhanFirst Published Feb 2, 2023, 9:33 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நேற்று ஒரே நாளில் மட்டும் தேர்தல் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் 3 வகையான கூட்டணி பெயர்களை மாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவும் அதிகார மோதலும்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அதிமுகவிற்கு யார் தலைமை என்ற போட்டியால் 4 பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தனியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது ஓபிஎஸ்யையும் அதிமுகவில் இருந்து நீக்கிய பிறகு பல்வேறு குழப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டியிடுவதால் அதிமுகவின் அங்கீகார சின்னமான இரட்டை இலை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குகிறாரா ஜெ.தீபா? OPS-ஐ திடீரென சந்தித்தன் காரணம் என்ன? அவரே கூறிய தகவல்.!

பாஜக யாருக்கு ஆதரவா.?

இந்த நிலையில் இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பாக காத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில்  ஈரோடு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். ஆனால் தங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது வரை எந்த அணிக்கு ஆதரவு என்ற தகவலை தெரிவிக்காமல் இரண்டு அணியையும் பாஜக காத்திருக்க வைத்தது. இதனையடுத்து நேற்று காலை திடீரென ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தங்கள் அணியின் வேட்பாளரை இபிஎஸ் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கிறது? ஒரே வரியில் நச்சுன்னு சொன்ன டிடிவி. தினகரன்..!

மூன்று கூட்டணியை மாற்றிய அதிமுக

இதனையடுத்து ஈரோட்டில் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகத்தில் முதலில் தேசிய முற்போக்கு கூட்டணி என தலைப்பு இடம் பெற்றது.  இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதாக தகவல் பரவியது. இந்த தகவல் பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்த நிலையில் சிறிது நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என பேனர் மாற்றப்பட்டது.நேற்று இரவு அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாஜக அணி அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறதா .? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே நாளில் ஏன் இந்த மாற்றம் என அதிமுகவினர் மட்டுமில்லாமல் பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா.? இல்லையா.? என தெரியாமல் நிர்வாகிகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர்! தமிழகத்திற்கு அளிக்கும் சலுகை என அதையும் நிறுத்திவிட்டாரா- திருமா

click me!