பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது.! வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு.!

By Ajmal KhanFirst Published Mar 2, 2023, 12:12 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். 

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 போ் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தனா். இதனையடுத்து ஈரோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எணணும் பணியானது தொடங்கியது.

தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றார். 5 சுற்று முடிவில் 26 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 13ஆயிரத்து 515 வாக்குகளும், ஈவிகேஎஸ் இளங்கோவன் 39ஆயிரத்து 855 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சோகத்தோடு அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணநாயகம் வென்றதாகவும், ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

click me!