சசிகலாவை கட்சியல் சேர்த்தால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி.. மீண்டும் சையது கான்.. ஓபிஎஸ் சித்து விளையாட்டு?

By Ezhilarasan BabuFirst Published Apr 4, 2022, 11:36 AM IST
Highlights

விரைவில் நல்லது நடக்கும் என ஓபிஎஸ் எங்களிடம் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அதிமுகவில் சசிகலா இணையக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருக்கிற அதிமுகவில் உள்ள ஒவ்வொரு அடிமட்ட நிர்வாகிகளின் விருப்பமும் அதுதான்.

சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே  அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் கூறியுள்ளார். சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் கூடி அவரது ஆதரவாளர்கள் சையது கான் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தற்போது மீண்டும் சையதுகான் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்க்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சையது கான் பன்னீர்செல்வத்தின் நிழல் என வர்ணிக்கப்படுகிறார். அவரின் இந்த கோரிக்கைகளுக்குப் பின்னர் ஓபிஎஸ் இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. 

சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை எனக் கூறி வருகின்றனர். இதில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக ஓபிஎஸ் கூறவில்லை என்றாலும், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்து வருகிறார். அதேநேரத்தில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் தனது ஆதரவாளர்கள் மூலம் தனது கருத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார் என்ற பேச்சு இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓ. பன்னீர் செல்வத்தின் நிழல் என்று வர்ணிக்கப்படுபவரும், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் உடன் ஒன்றாக ஒரே காரில் பயணிக்க கூடியவருமான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். அது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு பின்னணியில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜா சசிகலாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இதனால் ஓ.பி ராஜா கட்சியில் எந்த நீக்கப்பட்டுள்ளார்.  இதே நேரத்தில் இதுகுறித்து  செய்தியாளரிடம் பேசியிருந்த ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் சையது கான், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் வரை ஓயமாட்டோம்.

விரைவில் நல்லது நடக்கும் என ஓபிஎஸ் எங்களிடம் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அதிமுகவில் சசிகலா இணையக் கூடும் என்ற நம்பிக்கை  உள்ளது. சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருக்கிற அதிமுகவில் உள்ள ஒவ்வொரு அடிமட்ட நிர்வாகிகளின் விருப்பமும் அதுதான். தொடர்ந்து மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நான் இப்படி பேசுவதால் எடப்பாடி பழனிச்சாமி என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. தேனி  மாவட்ட நிர்வாகிகளின் சார்பாக எங்களது கருத்தை ஓபிஎஸ்சிடம் தெரிவித்துள்ளோம்.  மொத்தத்தில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் வரை ஓயமாட்டோம் என சசிகலாவுக்கு ஆதரவாக சையதுகான் தீர்மானம் நிறைவற்றிய நிலையில் தற்போது மீண்டும் ச சிகலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேயது கான், சசிகலாவை கட்சியில் இணைந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் ஆண்டிப்பட்டி தொகுதியில் தொடர்ந்து 2 முறை கட்சி தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. நாம் தொடர் தோல்வியில் இருந்து மீள சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுக மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!