அதிமுக, பாஜக பிரிஞ்சிட்டாங்க; இனி புதுச்சேரில நாம தான் - தொண்டர்கள் மத்தியில் நாராயணசாமி பேச்சு

Published : Sep 28, 2023, 05:54 PM IST
அதிமுக, பாஜக பிரிஞ்சிட்டாங்க; இனி புதுச்சேரில நாம தான் - தொண்டர்கள் மத்தியில் நாராயணசாமி பேச்சு

சுருக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் புதுச்சேரியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சாதகமான சூழல் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை வரும் பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும், OBC-க்கான இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், மீனவர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து அளிக்க வேண்டும், புதுச்சேரியில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு! ஒரு பெண் குழந்தை உயிரிழப்பு!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முன்னதாக கட்சி நிர்வாகிகளிடையே பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போதைய சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதன் காரணமாக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் சாதகமான சூழல் உள்ளது. ஆனால், அதிமுகவை நம்பவும் முடியாது. அவர்கள் எப்போது  வேண்டுமானாலும் மீண்டும் கூட்டணியில் ஒட்டிக் கொள்வார்கள். 

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு; பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி

அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் பூத் வாரியாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!