முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்து இழிவாக பேசியதாகக் கூறி கோவில்பட்டியில் திமுக எம்.பி. ஆ.ராசாவின் உருவப்படத்தை அதிமுக தொண்டர்கள் செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
undefined
அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜூ.ஆர் புகழ் குறித்து சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும். எம்.ஜூ.ஆர் 8வது வள்ளல். அவர் ஒரு தெய்வ பிறவி, ஈழத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நாங்கள் போராடினோம் என்றால் அதற்கு காரணம் எம்.ஜூ.ஆர் போட்ட பிச்சை என்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார். தமிழக மக்களின் உள்ளங்களில் இருந்து பிரிக்க முடியாத குடியிருந்த கோவிலாக எம்ஜிஆர் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆ.ராசா அவதூறாக பேசியுள்ளார். 2ஜி வழக்கில் ஒரு கோடியே 86 லட்சம் கொள்ளை அடித்த நபர் என்று கூறியபடியே ஆ.ராசாவின்புகைப்படத்தை ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து கடம்பூர் ராஜூ கீழே போட்டார். இதையெடுத்து அதிமுக தொண்டர்கள் செருப்பால் ஆ.ராசாவின் படத்தை அடித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆ.ராசாவின் படத்திற்கு தீ வைக்க முயற்சி செய்தனர்.
காட்டு யானையுடன் செல்பி; சுற்றுலா பயணியை தலைதெறிக்க ஓடவிட்ட ஒற்றை யானை - கேரளாவில் பரபரப்பு
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில், திமுகவை வளர்த்ததில் எம்ஜிஆருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆ ராசா பேசியதற்கு திமுக மூத்த தலைவர்கள் எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அதை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. திமுக ஒரு பசுந்தோள் போர்த்திய புலி. ஓட்டு வங்கிக்காக எம்ஜிஆர் எனக்கு ஆசான், எம்ஜிஆர் ரசிகன் என பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் ஆ.ராசாவை கண்டித்து அறிக்கை விடவில்லை? மறைந்தவர்களை பற்றி கொச்சைப்படுத்தி பேசுவது ஒரு மனிதப் பிறவிக்கு அழகல்ல என்றார்.