உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என்பதா? செம காண்டான ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Apr 15, 2021, 8:23 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிமுக - பாஜக அரசுகள் தோல்வியடைந்து விட்டது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிமுக - பாஜக அரசுகள் தோல்வியடைந்து விட்டது என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் உரிய நேரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வராதது, சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என பொறுப்பின்மையை பாஜக அரசு காட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கம் தடுப்பூசி போடுவதை ‛திருவிழா' என பெயர் சூட்டி பிரதமர் மோடி தனது அரசின் நிர்வாகத் திறமையின்மையை திசை மாற்றுகிறார்.

தமிழகத்தில் இதுவரை 40.21 லட்சம் பேருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை என்று மத்திய அரசு முடிவு எடுத்திருந்தால், அதை அதிமுக அரசு ஏன் எதிர்க்கவில்லை? தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிமுக - பாஜக அரசுகள் தோல்வியடைந்துவிட்டன. தமிழக மக்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

click me!