15 நாட்களில் இதை செய்து முடிக்க வேண்டும்... சுகாதாரத்துறையிடமிருந்து அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 15, 2021, 6:39 PM IST
Highlights

அனைத்து மாவட்டங்களிலும்தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 8 ஆயிரத்தை எட்டித் தொட கொரோனா தொற்று முயன்று வரும் நிலையில், மக்களை தொற்றிலிருந்து காக்கவும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஏப்ரல் 11ம் தேதி முதல்  14ம் தேதி வரை நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவிற்காக நடத்தப்பட்டது. அதன் மூலம் இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த 10 நாட்களில் அதாவது வரும் 25ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்டங்களிலும்தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 
 

click me!