உண்மை சுடத்தான் செய்யும்.. என்ன பண்றது.? அதிமுகவை விடாமல் சுழற்றி அடிக்கும் பாஜக

By Raghupati R  |  First Published Jun 13, 2023, 5:34 PM IST

அண்ணாமலையின் இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.  அதிமுக முக்கிய தலைவர்கள் எடப்பாடி  பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும்  கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் கருத்துக்கள், அதிமுகவினரை அதிகம் கோபப்படுத்தி வருகிறது. அந்தவகையில்  ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது.

முன்னாள் முதல்வர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால் தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

அதிமுக முக்கிய தலைவர்கள் எடப்பாடி  பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும்  கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  இதில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “தனிநபர் மீது தாக்குதல் நடத்துவதை அதிமுக தவிர்க்க வேண்டும். நல்ல எண்ணமும், நேர்மையும் கொண்ட முதிர்ச்சியான தலைவர் அண்ணாமலை, முதிர்ச்சி என்பது வயது, அனுபவத்தால் வருவது அல்ல, எண்ணத்தால் வருவது. உண்மை சுடத்தான் செய்யும், சுட்டால் படபடக்கத்தான் செய்யும். படபடத்தால் பதற்றம் ஏற்படத்தான் செய்யும்” என்று அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க..ஏர் கூலர் + அரை நாள் போராட்டம்.. ஜெயலலிதா சர்ச்சை முடிவதற்குள் கருணாநிதியை வம்புக்கு இழுத்த அண்ணாமலை

click me!