அமமுக – ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவை தொகுதிகளில் ஸ்ட்ராங்கா இருக்கோம்! இபிஎஸ்-ஐ அலறவிடும் டிடிவி.தினகரன்.!

By vinoth kumar  |  First Published Jun 13, 2023, 3:19 PM IST

அம்மாவின் தொண்டர்களால் தான் திமுக வீழ்த்த முடியும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவோடு அதிமுகவிற்கு சமாதி கட்டி விட்டனர். திமுக ஆட்சியை பற்றி பேச வேண்டும் என்றாலே வானம் கூட வரவேற்கிறது. 


ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது தமிழ்நாடு முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும்  ஓபிஎஸ் அணியின் வைத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் பேசுகையில்;- ஆறாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதவிக்காக தொடங்கப்பட்டது அல்ல. அண்ணா திமுக தொண்டர்களுக்காக தொடங்கப்பட்டது. நாங்கள் ஓய மாட்டோம் ஓடி விடமாட்டோம் கொள்கைக்காக சேர்ந்த வீர தமிழர்களின் கூட்டம். உங்களைப் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழித்திட முடியாது. யாரோ ஒரு சிலர் குழப்பத்தால் குழம்பி போய் பலர் விலை போய் இருக்கிறார்கள். ஆனால் தெளிந்த நீரோடையாக அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கவே என்னோடு தொண்டர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசானா மட்டும் போதாது! இதை செய்யுங்கள்! அண்ணாமலையை ஊசுப்பேற்றி விடும் டிடிவி.தினகரன்.!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை கபளீகரம் செய்து விட்டனர். அமமுக – ஓபிஎஸ் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றுபட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமைந்த கூட்டணி. இந்த கூட்டணியால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 14 மக்களவைத் தொகுதிகளில் மிகவும் வலுவாகி விட்டோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது தமிழ்நாடு முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்ஜிஆருக்கு  பின் 30 ஆண்டுகாலம் ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றிய கட்சியை இன்று யாரோ ஒருவர் கபலி கரம் செய்து விட்டார். அதை மீட்டெடுப்பதற்காக தான் நானும் ஓபிஎஸ் அவர்களும் சேர்ந்து இருக்கிறோம். எங்களின் இணைப்பை ஜாதி மதத்தை அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதை வெளிப்பாடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க;- நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் சசிகலா, டிடிவி தினகரன் தான்! துரோகி இபிஎஸ்! வைத்தியலிங்கம் ஆவேசம்.!

அம்மாவின் தொண்டர்களால் தான் திமுக வீழ்த்த முடியும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவோடு அதிமுகவிற்கு சமாதி கட்டி விட்டனர். திமுக ஆட்சியை பற்றி பேச வேண்டும் என்றாலே வானம் கூட வரவேற்கிறது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறார். இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கக்கூடிய காலம் நெருங்கிவிட்டது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!