அதிமுகவில் - அமமுக இணையும் பேச்சுக்கே இடமில்லை... தேர்தலில் சந்திப்போம்.. தில்லாக சவால் விடும் தினகரன்...!

By vinoth kumarFirst Published Feb 24, 2021, 3:10 PM IST
Highlights

ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றாக இணை வேண்டும் என்ற கருத்தைத்தான்  சசிகலா கூறியிருக்கிறார். அதிமுக - அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
 

ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றாக இணை வேண்டும் என்ற கருத்தைத்தான்  சசிகலா கூறியிருக்கிறார். அதிமுக - அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அமமுக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாடி வருகிறார்கள். அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை. ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றாக இணை வேண்டும் என்ற கருத்தைத்தான்  சசிகலா கூறியிருக்கிறார். அதிமுக - அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை என்று விளக்கமளித்துள்ளார். 

மேலும், அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி நாளை முதல் பொதுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளோம். நாங்கள் சில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது. பேசி முடித்தவுடன் அறிவிப்போம். அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஊழலுக்காக ஒரு ஆட்சியை கலைத்தார்கள் என்றால் அது திமுக ஆட்சிதான் அதுதான் என் கருத்து. எங்களின் பொது எதிரி திமுக. நம்முடைய இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் ஆணைய அறிவிப்பு வந்துவிடும், அதன் பின்னர் இந்த ஆட்சி கிடையாது, தேர்தல் ஆணைய ஆட்சிதான் நடக்கும். அதன் பின்னர் பாருங்கள். அப்போது எது தேவையோ அதை பேசுவோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!