அதிமுகவின் சாமானியர்களுக்கான புதிய அறிவிப்புகள்

Published : Feb 24, 2021, 02:50 PM IST
அதிமுகவின் சாமானியர்களுக்கான புதிய அறிவிப்புகள்

சுருக்கம்

சாமானிய மக்களுக்கான அதிமுகவின் புதிய அறிவிப்புகளை பார்ப்போம்.

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் கணிப்பொறி மற்றும் அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கோவையில் 6,683 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம், 44 கிலோமீட்டர் வரை அமைக்க போவதாக அறிவிப்பு.

12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது, அதில் 2,000 புதிய மின்சார பேருந்துகள் வாங்க போக்குவரத்து கழகத்திற்கு 623 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகல் நலனுக்காக RIGHTS என்ற திட்டம் வகுக்கப்பட்டு 688 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும். 

இயற்கை மரணம் மற்றும் இயலாமைக்கு அம்மா காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

கனடாவில் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி