கெத்த விட்டுக் கொடுத்தும் கெஞ்ச வைச்சுட்டாரே... விஜயகாந்துக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் பகீர் சபதம்..!

Published : Mar 06, 2019, 01:02 PM ISTUpdated : Mar 06, 2019, 02:17 PM IST
கெத்த விட்டுக் கொடுத்தும் கெஞ்ச வைச்சுட்டாரே... விஜயகாந்துக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் பகீர் சபதம்..!

சுருக்கம்

ஜெயலலிதா இருந்தபோது எந்த கட்சியிடமும் கூட்டணிக்கு இப்படி கெஞ்சியதில்லை. மற்ற கட்சியினரில் வாசலுக்கு சென்றும் நின்றதில்லை.

திமுக கூட்டணியை நிறைவு செய்து விட்டது. ஆனால், அதிமுகவை தேமுதிக முடிவெடுக்க விடாமல் இழுத்தடித்து வருகிறது. வாடிவாசல் வரை வந்த கன்றுக்குட்டியாய் முடிவை அறிவிக்காமல் பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகளை வெறுப்பேற்றிப் வருகிறது. 

விஜயகாந்த் வீடுவரை வழிய சென்று அதிமுக கூட்டணிக்கு அழைத்ததை அதிமுக தொண்டர்கள் சென்டிமென்டாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதா இருந்தபோது எந்த கட்சியிடமும் கூட்டணிக்கு இப்படி கெஞ்சியதில்லை. மற்ற கட்சியினரில் வாசலுக்கு சென்றும் நின்றதில்லை. போயஸ்கார்டன், அதிமுக தலைமை கழகத்துக்கு கூட்டணி கட்சியினர் வந்து செல்வதுதான் வழக்கம். இதுவரை கூட்டணிக்காக ஜெயலலிதா இறங்கி சென்றதே இல்லை. 

ஜெயலலிதா இறந்த பிறகு முதன் முறையாக பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தேமுதிக தலைவர் வீட்டுக்கு போய் பேச்சுவார்த்தை நடத்தினார். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் நடந்த இந்தப்பேச்சுவார்த்தை நடந்து இரண்டு நாட்களாகி விட்ட நிலையில் தேமுதிக தண்ணி காட்டி வருவது அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எம்ஜிஆர் தொடங்கிய கட்சியின் மரியாதையை சீர் குலைத்துவிட்டார்கள். நாம் போய் மற்றவர்களின் வாசலுக்கு சென்று கூட்டணி பற்றி பேசுவது அவமானமாக உள்ளது. 

எனவே, இந்த தேர்தலில் தேமுதிக போட்டியிடும் இடங்களில் நாம் வேலை செய்யக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமை வகித்த கட்சியை அவமானப்படுத்திய விஜயகாந்தை சும்மா விடக்கூடாது என அதிமுக தொண்டர்கள் கடுப்பில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!