மீண்டும் மக்கள் நலக்கூட்டணி..! வைகோவை உசுப்பும் டெல்லி!

By Selva KathirFirst Published Feb 9, 2019, 9:36 AM IST
Highlights

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உருவாக்கியது போன்று தமிழகத்தில் 3வது அணியை உருவாக்குமாறு வைகோவை டெல்லியில் உள்ள சிலர் உசுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உருவாக்கியது போன்று தமிழகத்தில் 3வது அணியை உருவாக்குமாறு வைகோவை டெல்லியில் உள்ள சிலர் உசுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் பி டீமாக உருவானது தான் மக்கள் நலக்கூட்டணி. நடராஜனின் மேற்பார்வையில் உருவான இந்த அணி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்று தெரியாமலேயே விஜயகாந்த் அதில் போய் சிக்கினார். அதுமட்டும் அல்லாமல் சின்னா பின்னாமாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான லாபி நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

அதாவத தி.மு.க கூட்டணியில் தற்போது வரை ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி என்று கூட முடிவாகவில்லை. அதே சமயம் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளுடன் ஸ்டாலினே நேரடியாக பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார். எவ்வளவோ வைகோ கேட்டுப் பார்த்தும் ஸ்டாலின் வாயில் இருந்து கூட்டணியில் இருக்கிறீர்கள் என்கிற தகவல் மட்டும் வரவில்லை. 

அண்மையில் திருச்சியில் ஸ்டாலினை சந்தித்து பேசிய போது கூட வைகோவிடம் கூட்டணி தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் பா.ம.கவை இணைக்க முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் திருமாவளவன் கடும் அதிருப்தியில் உள்ளார். தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்தால் தாங்கள் இருக்கமாட்டோம் என்று வெளிப்படையாகவே திருமா கூறிவிட்டார். இதே போல் வைகோவுக்கும் தொகுதிப்பங்கீட்டில் பிரச்சனை உள்ளது.

இதனை பயன்படுத்தி வைகோ மூலமாக கடந்த தேர்தலை போல் ஒரு புதிய கூட்டணி உருவாக்கினால் புதிய வாக்காளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான வாக்ககுள் அந்த கூட்டணிக்கு செல்லும் என்று ஒரு கணக்கு போட்டிருக்கிறது டெல்லி. இதன் ஒரு கட்டமாகவே டெல்லியில் வைகோ – நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடைபெற்றதாகவும் சொல்கிறார்கள். ஸ்டாலின் வழிக்குவரவில்லை என்றால் மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாவதை தடுக்க முடியாது என்று வைகோவுக்கு நெருக்கமானவர்களே கசியவிட்டு வருகின்றனர்.

click me!