தாலி கட்டுனாத்தான் பொண்டாட்டி… ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டாத்தான் கூட்டணி… வைகோ, திருமாவை மீண்டும் வம்புக்கிழுக்கும் துரை முருகன் !!

By Selvanayagam PFirst Published Feb 9, 2019, 7:51 AM IST
Highlights

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது என்றும் மற்ற கட்சிகள் கூட்டணியில் இல்லை என்றும் திமுக பொருளாளர் துரை முருகள் அதிரடியாக தெரிவித்து மீண்டும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

துரைமுருகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லை எனறும் தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளது என்றும் அதிரடியாக தெரிவித்தார். இது அரசியலில் குறிப்பாக மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்தன.

இதையடுத்து ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து சமாதானப்படுத்தினார். ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர துரைமுருகன் பெரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக கட்சிகளிடயே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என்பதால், எப்படியாவது வி.சி.கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என துரைமுருகன் அழுத்தம் கொடுத்து வருகிறார்.


இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டியளித்த துரை முருகன், இப்போதும் சொல்கிறேன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே உள்ளது, வேறு கட்சிகள் கிடையாது என தெரிவித்தார்.

ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினால் தான் அவள் பொன்டாட்டி… அது போல்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் மற்ற கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வரும். தற்போதைக்கு இன்னும் கூட்டணி முடிவாகவில்லை என அதிரடியாக தெரிவித்தார்.

இதையடுத்து வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை துரை முருகன் மீண்டும் வம்புக்கிழுத்துள்ளது அக்கட்சியினரிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!