மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த ஜெயானந்த்…. புதிய கூட்டணியா ? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு !!

Published : Feb 09, 2019, 05:43 AM IST
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த  ஜெயானந்த்…. புதிய கூட்டணியா ? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு !!

சுருக்கம்

பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான  பியூஸ் .கோயலை சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த்  நேற்று டெல்லியில் திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் புதிய கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக வெளியான தகவலையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவு மற்றும் சசிகலா சிறை சென்றது என அடுத்துடுத்து நிகழ்ந்த செயல்களால் டி.டி.வி.தினகரன் தனி கட்சி தொடங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் அதிமுக இன்று பல அணிகளாக பிரிந்து கிடைப்பதற்கு காரணம் முழுக்க முழுக்க தினகரன் தான் என  சசகலாவின் சகோரர் திவாகரன்  குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவர்  அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.


அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவராக திவாகரனின் மகன் ஜெயானந்த். பொறுப்போற்றுள்ளார். மேலும் அவர் போஸ் நற்பணி இயக்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

தினகரனுடன் ஏற்பட்ட கடும் மோதலை அடுத்து திவாகரன் எடப்பாடியுடன் கை கோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திவாகரன் தரப்பினர் இத்தனை நாளும் அமைதியாக இருந்தனர்.

இந் நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ஜெய் ஆனந்த்  திடீரென சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது.

மத்திய அமைச்சரான பியூஷ் கோயல்தான் நாடாளுமன்ற  தேர்தலுக்கான தமிழக பாஜகவின் பொறுப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் எதற்கான சந்திப்பு இது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  கருதப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதில் பாஜகவும் நிச்சயமாக இணையும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், திவாகரன் மகன் சந்திப்பு.. அரசியலை ஒட்டியதாகவே இருக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு