பிரதமர் நரேந்திர மோடி ஊழல்களுக்கெல்லாம் மாஸ்டர் …. வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி !!

Published : Feb 08, 2019, 08:58 PM IST
பிரதமர் நரேந்திர மோடி ஊழல்களுக்கெல்லாம் மாஸ்டர் …. வெளுத்து வாங்கிய  மம்தா பானர்ஜி !!

சுருக்கம்

நாட்டின் மிகப் பெரிய ஊழல் ரஃபேல் ஊழல் தான் என்றும், பிரதமர் மோடி ஊழல்களுக்கொல்லாம் மாஸ்டர் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில்  உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது. அவர் கோத்ரா மற்றும் பிற மோதல்களில் இருந்து வந்தவர். தேர்தலுக்கு முன்னால் அவரை சாய்வாலா என அழைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் ரஃபேல் வாலா என அழைக்கப்பட உள்ளார் என தெரிவித்தார்.

நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரஃபேல் ஊழல் இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி ரஃபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டராக விளங்குகிறார்.

பணத்தின் பலத்தால் மோடி பிரதமர் ஆனது மிகவும் துரதிஷ்டவசமானது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக பணியாற்றுவதால் பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால், எனக்கு பயம் கிடையாது. நான் என்னுடைய பாதையில் போராடுகிறேன். எங்களது கொள்கைக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன் என மம்தா கூறினார்.

நாங்கள் பிரதமர் நாற்காலிக்குத்தான்  மரியாதை அளிக்கிறோம். அவருக்கு அல்ல என  மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு