எம்.ஜி.ஆருக்கு பிறகு அந்தக் கொடுப்பினை சசிகலாவுக்கு மட்டும்தான்... பாஜக மூத்த தலைவர் பெருமிதம்..!

Published : Feb 10, 2021, 02:47 PM IST
எம்.ஜி.ஆருக்கு பிறகு அந்தக் கொடுப்பினை சசிகலாவுக்கு மட்டும்தான்... பாஜக மூத்த தலைவர் பெருமிதம்..!

சுருக்கம்

பாஜக- அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்நிலையில் சசிகலா வருகை, வரவேற்பு குறித்து பெருமைபட பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் கருத்து தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   

சசிகலா வருகை அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், விடுதலைக்கு பின்னரும் அங்கேயே சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று முன்தினம் அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை தமிழகம் வந்தடைந்தார்.

சசிகலா வருகையையொட்டி அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தகையை வரவேற்பை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு பேண்டு, வாத்தியம் முழங்க, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்தார். இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “சசிகலா வருகை அதிமுகவுக்கு பலம் சேர்க்கும். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய வரவேற்பை பெரிய எழுச்சியாக கருதுகிறேன். இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு தான் இதுபோன்ற வரவேற்பு இருந்ததை பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

பாஜக- அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்நிலையில் சசிகலா வருகை, வரவேற்பு குறித்து பெருமைபட பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் கருத்து தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!