‘ஒன்றிணைவோம் வா’என திமுகவுக்கு தூது அனுப்பும் சசிகலா, தினகரன்.. உண்மையை போட்டுடைத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Feb 10, 2021, 2:18 PM IST
Highlights

கூட்டம் இருப்பது போல் மாயை ஏற்படுத்தி பில்டப் தர வேண்டாம். பணத்தை கூட்டி கூட்டத்தை கூட்டினால் அது நிலைக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

கூட்டம் இருப்பது போல் மாயை ஏற்படுத்தி பில்டப் தர வேண்டாம். பணத்தை கூட்டி கூட்டத்தை கூட்டினால் அது நிலைக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கூட்டம் இருப்பது போல் மாயை ஏற்படுத்தி பில்டப் தர வேண்டாம். பணத்தை கூட்டி கூட்டத்தை கூட்டினால் அது நிலைக்காது. தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இருந்த அதே  கூட்டணி தொடரும். நட்பு ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவை சந்திப்பதில் தவறில்லை. கொள்கை வேறு கூட்டணிவேறு என கூறினார்.

சசிகலாவும், தினகரனும் ஒற்றிணைவோம் வா என்று திமுகவைத்தான் அழைக்கிறார்கள் தவிர அதிமுகவை இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா சந்திப்பு ஜென்மத்தில் நடக்காது. சசிகலா மற்றும் திமுகவிற்கு பொது எதிரி அதிமுகதான்.  

மேலும், கோயமுத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் வேலுமணி நமக்குள் இருப்பது அண்ணன்-தம்பி பிரச்சனைதான், நம் எதிரி திமுகதான். நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றவேண்டும் என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அண்ணன்- தம்பி பிரச்சனை என்று கட்சிக்காரர்களை பற்றிதான் அமைச்சர் வேலுமணி சொன்னார். இந்த விவகாரம் தவறாக திரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். 

அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சசிகலாவை சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர் எந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். அவர் யாரென்று தெரியாது என கூறினார்.

click me!