தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை.. சென்னையில் சுனில் அரோரா தலைமையிலான குழு .

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2021, 1:58 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் ஆலோசனை செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் ஆலோசனை செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. முதல் நாளான புதன்கிழமை (இன்று) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளை தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். 

 

அதை தொடர்ந்து  தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, காவல் கண்காணிப்பு அதிகாரியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்கள்.  நாளை  வருமான வரித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். 

தொடர்ந்து  தமிழக தலைமை செயலாளர்  ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர், பல்வேறு துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.யுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பை முடித்து கொண்டு, சாலை மார்க்கமாக புதுச்சேரி புறப்பட்டு செல்கின்றனர். ஏற்கனவே தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!