நன்றி கெட்டவர்கள்... விரைவில் அனைவரும் சசிகலா காலில் விழுவார்கள்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ அதிரடி சரவெடி..!

Published : Feb 10, 2021, 01:40 PM IST
நன்றி கெட்டவர்கள்... விரைவில் அனைவரும் சசிகலா காலில் விழுவார்கள்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ அதிரடி சரவெடி..!

சுருக்கம்

நான் என்றும் சசிகலாவிற்கு உண்மையாக இருப்பேன். இன்று அவரை அவதூறாக பேசுபவர்கள் விரைவில் தேடி வருவார்கள் என  முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கூறியுள்ளார். 

நான் என்றும் சசிகலாவிற்கு உண்மையாக இருப்பேன். இன்று அவரை அவதூறாக பேசுபவர்கள் விரைவில் தேடி வருவார்கள் என 
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கூறியுள்ளார். 

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.வாக நாஞ்சில் முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு இவர் மீது தாய், மகள் இருவரை சீரழித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்டப்டார்.  தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில், சென்னை திரும்பிய சசிகலாவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தவறு செய்தவர்கள்தான் நன்றி கெட்டவர்கள். விரைவில் அனைவரும் சசிகலா காலில் விழுவார்கள். நான் என்றும் சசிகலாவிற்கு உண்மையாக இருப்பேன். இன்று அவரை அவதூறாக பேசுபவர்கள் விரைவில் தேடி வருவார்கள் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?