ராஜ்பவனுக்கு வண்டியை விடும் எடப்பாடி பழனிசாமி.. அண்ணாமலைக்கு பதிலடியா? திமுகவுக்கு ஆப்பா?

By Raghupati R  |  First Published May 21, 2023, 3:21 PM IST

கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார்.


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். இவருக்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

கோவையில் நேற்று முன்தினம் கோவையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‛‛தமிழ்நாட்டில் பட்டித்தொட்டி எங்கும் கள்ளச்சாராயம் புழங்க துவங்கி உள்ளது. இதன் வெளிப்பாடாக தான் விழுப்புரம் பகுதியில் உயிரிழப்புகள் நடந்துள்ளன.

Latest Videos

undefined

இதையும் படிங்க..9 தோல்வி எடப்பாடி..சேலத்தில் மாநாடு.! கொங்கு மண்டலத்தில் சீக்ரெட் மீட்டிங் - ஓபிஎஸ் Vs இபிஎஸ் மோதல்

ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் கண்டிக்கிறோம்'' என்று கூறினார். அதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து புகாரை கொடுக்க உள்ளோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் முதலானோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆளுநரை சந்திக்கவுள்ளார். தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷ சாராய மரணங்கள், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து  மனு அளிக்க உள்ளார்.

சைதாப்பேட்டை சின்னமலை அருகே அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை செல்கின்றனர். அங்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நிகழ்வு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?

click me!