திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்.! நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் - என்னென்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 21, 2023, 2:03 PM IST

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஜூன் 20 ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கவுள்ளதாகவும், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


கருணாநிதி நூற்றாண்டு விழா

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமாக கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஜூன் 3 ஆம் தேதி வட சென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது,

Latest Videos

திருவாரூருக்கு வரும் நிதிஷ்குமார்

ஜூன் 20 ஆம் தேதி பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டங்கள் நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் கலைஞரின் முழு உருவச்சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட கழக முன்னோடிகளை பொற்கிழ வழங்க வேண்டும். மேலும்  படிப்பகங்களை உருவாக்கி மக்களை அறிவாற்றல் மிக்க ஜனநாயக சக்தியாக மாற்றிய இயக்கும் திமுக. எனவே இன்றைய சூழலுக்கேற்ப கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகம் தொடங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

முன் கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடும் பாஜக.! ஏன் தெரியுமா.? டிஆர் பாலு கூறிய பரபரப்பு தகவல்

click me!