முன் கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடும் பாஜக.! ஏன் தெரியுமா.? டிஆர் பாலு கூறிய பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published May 21, 2023, 12:56 PM IST

நாடாளுமன்ற தேர்தலை 6  மாத காலத்திற்கு முன் கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.


முன் கூட்டியே நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இதற்காக திமுக, அதிமுக, பாஜக  உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை செம்பாக்கம் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் திமுக பொருளாளாருமான டி. ஆர் பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், தேர்தலில் பாஜக எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு தொல்லை கொடுக்கும் அதனால் திமுகவினர் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

Latest Videos

செந்தில் பாலாஜி,மஸ்தானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்! மகளிர் அணியோடு சென்று ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

6 மாதங்களுக்கு முன்பாக நடத்த திட்டம்

எம்பி மற்றும் எம்எல்ஏக்களை வெற்றிபெற வைக்க மக்களிடம் நம்முடைய சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி நாம் வெற்றி பெற செய்கிறோம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர்,  வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கும் செயலைதான் மற்ற மாநிலங்களில்  நாம் பார்த்து வருகிறோம் அதனால் ஒற்றுமையுடன் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதனை தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு,  நாடாளுமன்ற தேர்தல் ஆறு மாதங்களுக்கு முன்பாக வர வாய்ப்புள்ளது. எனவே இந்த தேர்தலில்  மிகப்பெரிய எதிரியை சந்திக்க வேண்டும் என்ற நிலையை எண்ணிப் பார்த்து திமுகவினர் பணியாற்ற வேண்டும்.  இப்போது உள்ள நிலையில் ஆறு மாதம் முன்பு தேர்தல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.  

களப்பணியில் தீவிரம் காட்டுங்கள்

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து முடிவு எடுத்து இவர் தான் பிரதமர் என அறிவிக்கும் முன்பே தேர்தலை நடத்தி வெற்றி பெறலாம் என்ற நப்பாசையுடன் பிரதமர் மோடி உள்ளார். அது நியாயமானது ஒன்று தான். எதிரி எப்போது வீக்கா இருப்பான், கீழே விழுவான் என அந்த நேரம் பார்த்து காத்திருப்பார்கள். அப்போது தான் அடிப்பார்கள் அது போல கெட்டிக்காரத்தனமாக இதை செய்யலாம் என மோடி நினைப்பதாக கூறினார்.  ஆனால் இந்த திட்டத்தை திமுக முறியடித்து இந்தியா மட்டுமல்ல, அகில உலகமும் பேசும் அளவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.  அதற்கு திமுக தொண்டர்கள் இப்போதே களப்பணி ஆற்ற வேண்டும் என டிஆர் பாலு கேட்டுகொண்டார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜி,மஸ்தானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்! மகளிர் அணியோடு சென்று ஆளுநரிடம் அண்ணாமலை புகார்
 

click me!