கட்சியை மீட்காவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக இழக்கும்... கி.வீரமணி பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Feb 3, 2023, 8:39 PM IST
Highlights

அடமானத்தில் உள்ள கட்சியை மீட்காவிட்டால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் அதிமுக இழக்கும் என்று தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

அடமானத்தில் உள்ள கட்சியை மீட்காவிட்டால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் அதிமுக இழக்கும் என்று தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்.

இதையும் படிங்க: கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்… பாஜக குறித்து கிஷோர் கே சுவாமி பரபரப்பு கருத்து!!

அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும், திராவிட மாடல் ஆட்சியின் வெற்றியாக, தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக் கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும். மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது.

இதையும் படிங்க: எங்க கட்சியை நாங்க பாத்துக்குறோம்!.. பாஜக அறிவுரை தேவையில்லை.. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் உள்குத்து

அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும். அண்ணாமலை எடப்பாடியை சந்தித்தாலும், நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமானப் பொருளை எப்போது திரும்பி மீட்கிறார்களோ? அப்போதுதான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அதிமுக இருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்தார். 

click me!