
சசிகலாவின் சிறைத் தண்டனைக்கு விதி செய்த சதி தான் காரணம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருநின்றவூரில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்
அப்போது பேசிய அவர், அதிமுகவை எப்படியாவது அழித்துவிடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அதிமுக என்றென்றும் நிலைத்திருக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருக்க விதி செய்த சதிதான் காரணம்... இவ்வாறு அவர் தெரிவித்தார்.