ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு? - வெங்கையாநாயுடுவை சந்தித்தபின் தம்பிதுரை பரபரப்பு பேட்டி!

 
Published : Jun 16, 2017, 02:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு? - வெங்கையாநாயுடுவை சந்தித்தபின் தம்பிதுரை பரபரப்பு பேட்டி!

சுருக்கம்

admk supports bjp in president election

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக தரப்பில் அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 23ந் தேதி அதன் வேட்பாளரை அறிவிக்கும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை , ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

வெங்கைய நாயுடு எனது நண்பர் எனவும், அவருடனான சந்திப்பு அரசியல் குறித்தது அல்ல எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்